
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (04) முற்பகல் 10.30 மணி முதல் நாளை (05) முற்பகல் 10.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், கடல் அலைகளின் உயரம் 2 முதல் 3 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம் என்பதால், கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
