
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சீனப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டின் மே 19ஆம் திகதி இருநாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பயணத்தின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் புட்டின் சந்தித்து இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது மற்றும் பல்துறை ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவுள்ளதுடன், பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் முதல் முறையாக சீனா பயணம் மேற்கொண்ட நிலையில், அதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் விஜய அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
