
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கைப்பற்றல்களை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்ற நம்பிக்கை குறைந்ததையடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.54 டொலர்கள் (3.35%) அதிகரித்து 109.26 டொலர்களாக உயர்ந்துள்ளது. மேலும், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 4.25 டொலர்கள் (4.2%) அதிகரித்து 105.42 டொலர்களாக பதிவாகியுள்ளது.
ஈரான் தொடர்பான மோதல் நிலைமை இன்னும் உறுதியற்றதாகத் தொடரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் பிரெண்ட் எண்ணெய் விலை 7.84 சதவீதமும், WTI எண்ணெய் விலை 10.48 சதவீதமும் உயர்ந்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வார்த்தைப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதுடன், தற்காலிக போர்நிறுத்தம் நீடித்தாலும் ஹோர்முஸ் நீரிணை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு குறைந்துள்ளதாக கொமர்ஸ்பேங்க் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
