
இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை 25 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவாலும் உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிற்றுண்டி வகைகளின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
எனினும், முட்டை ரொட்டி, பரோட்டா மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை Laugfs Gas நிறுவனம் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
