
2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 6 மாணவர் சேர்க்கைக்கு இரண்டாம் சுற்று மேன்முறையீடுகளை (Appeals) சமர்ப்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இரண்டாம் கட்ட மேன்முறையீடுகளை 2026 மே 8ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளமான கல்வி அமைச்சு இணையதளம் மூலம் தங்களின் மேன்முறையீடுகளை பதிவு செய்யலாம்.
மேலும், Grade 6 Application Portal என்ற இணைப்பின் மூலமும் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
ஒரு மாணவர் அதிகபட்சமாக 3 பாடசாலைகளுக்கு மட்டுமே மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
