
மே மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 4,765 ரூபாய்க்கே தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.
மேலும், 5 கிலோகிராம் சிலிண்டர் 1,910 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 890 ரூபாய்க்கும் மாற்றமின்றி கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது
litro-gas-price-may-no-change
