
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நடிகை நயன்தாரா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், “வாழ்த்துகள் விஜய் சேர், நீங்கள் இன்று வரலாறு படைத்துவிட்டீர்கள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாழ்த்து பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
