
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சற்று முன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறுகிறது.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
