
தற்போதைய சமூக மாற்றங்கள் மற்றும் உருவாகி வரும் சவால்களுக்கு ஏற்ப சட்டங்களை புதுப்பிக்கும் நோக்கில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தை மீளாய்வு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 1998 ஆம் ஆண்டு இலக்கம் 50 கொண்ட சட்டத்தின் கீழ் முதன்முதலாக நிறுவப்பட்டது.
அதேவேளை, சிறுவர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், 2005 ஆம் ஆண்டின் இலக்கம் 34 கொண்ட குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
