
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு வரி 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டமை மற்றும் அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளமை காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாற்றம் அனைத்து வகையான வாகனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நடுத்தர மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரபல வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும் எனவும் கூறப்படுகிறது.
அதன்படி, Honda Vezel வாகனத்தின் விலை சுமார் 3 இலட்சம் ரூபாவாலும், Toyota Raize வாகனத்தின் விலை சுமார் 2.5 இலட்சம் ரூபாவாலும் உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Suzuki Wagon R வாகனத்தின் விலை சுமார் 1.5 இலட்சம் ரூபாவினால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
