
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹ்மத் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த 14ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது, அவருக்கு வலது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனையில் இது ‘கிரேட் 2’ (Grade 2) வகையைச் சேர்ந்த தசை கிழிவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காயத்திலிருந்து முழுமையாக குணமடைய குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் வரை ஆகும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாகவே அவர் தொடரில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
