
கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் முந்திரியம்பருப்பு பெருந்தொகையுடன் பாரவூர்தி ஒன்றில் பயணம் செய்த நபர் ஒருவரை கற்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாச்சிகல்லி பகுதியில் நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. கற்பிட்டி காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், பாரவூர்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 742 கிலோகிராம் மஞ்சளும், 800 கிலோகிராம் முந்திரியம்பருப்பும் பறிமுதல் செய்யப்பட்டன.
மீட்கப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி பல இலட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
