
கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, 515 பட்டதாரி தாதியர்களுக்கு இன்று (29) உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நியமனங்கள் அனைத்தும் தரம் III தாதிய உத்தியோகத்தர் பதவிகளுக்காக வழங்கப்படுகின்றன.
2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டதாரி தாதியர்களுக்கான புதிய நியமனங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
புதிதாக நியமனம் பெறும் தாதியர்கள், நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசாங்க மற்றும் போதனா மருத்துவமனைகளில் உடனடியாகப் பணியில் அமர்த்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போதைய நிலவரப்படி இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறையில் மொத்தம் 43,553 தாதிய உத்தியோகத்தர்கள் சேவையாற்றி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
