
தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் 9ஆவது முதலமைச்சராக பதவியேற்றார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த முக்கிய நிகழ்வில், இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
சுமார் 6000 காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
