
இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதத் தகவல்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று ஒப்பிடுகையில் சற்றுக் குறைந்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூபா 339.06 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று (17) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 339.90 ஆக காணப்பட்ட நிலையில், இன்று அதன் பெறுமதி சிறியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நிலவரம், டொலருக்கான கேள்வி மற்றும் வழங்கல், அத்துடன் நாட்டின் பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் தாக்கத்தால் நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
