
இலங்கை மத்திய வங்கி இன்று (03) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.340.44 ஆக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.341.09 ஆக இருந்த நிலையில், இன்று அது ரூ.0.65 குறைந்துள்ளது.
இதன்மூலம், அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் சரிவை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
