இலங்கையில் இன்று தங்க விலை சரிவு; 24 கரட் பவுன் ரூ.3,000 குறைந்தது

இலங்கையில் இன்று (24) தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (23) 24 கரட் தங்கம் ஒரு பவுன் ரூ.377,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.3,000 குறைந்து ரூ.374,000 ஆக பதிவாகியுள்ளது.

அதேபோல், நேற்று ரூ.346,800 ஆக விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை, இன்று ரூ.2,800 குறைந்து ரூ.344,000 ஆக உள்ளது.

தற்போதைய விலைப்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ.46,750 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ.43,000 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தங்கச் சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களின் தாக்கம் காரணமாக, இலங்கையின் உள்நாட்டு தங்க விலைகளும் தொடர்ச்சியாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top