விஜய்யின் ரசிகன் எனக் கூறிய நாசா விஞ்ஞானி: மாணவர்களை ஆச்சரியப்படுத்திய செயல்

நாசா நிகழ்வில் வைரலான முதலமைச்சர் விஜய்யின் கை சைகை

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், நாசா விண்வெளி நிலையத்தின் பிரபல விஞ்ஞானி மருத்துவர் டோன் தோமஸ் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, நாசா விண்வெளி நிலையத்தின் சென்னை கிளை பிரதம நிறைவேற்று அதிகாரி காயம்பு இராமலிங்கம், தமிழக முதல்வர் விஜய் தொடர்பாக மருத்துவர் டோன் தோமஸிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த மருத்துவர் டோன் தோமஸ், தான் தமிழக முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகர் எனத் தெரிவித்ததுடன், அவரது நிர்வாகத் திறமையையும் பாராட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, விஜய்யின் வைரலான கை சைகையை மேடையில் செய்து காட்டிய மருத்துவர் டோன் தோமஸ், அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நாசா விஞ்ஞானி ஒருவர் விஜய்யின் கை சைகையை மேடையில் செய்து காட்டிய சம்பவம், நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top