
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (03) குறிப்பிடத்தக்க அளவில் உயர்வடைந்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,139.77 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 61.24 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் உள்நாட்டு தங்க விலையிலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது
