
தெஹிவளை, கவுடான பகுதியில் உள்ள சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறார்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் இடம்பெற்ற வேளையில், இனந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டின் மீது கைக்குண்டொன்றை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
