
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கணேமுல்ல சந்தியிலிருந்து அநியாகந்த மருத்துவமனை வரையிலான கொழும்பு நோக்கிய இரு வழித்தடங்களும் இன்று இரவு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹப்புகொட ஸ்ரீ வர்தனாராம விகாரையின் வருடாந்த வெசாக் பெரஹரா ஊர்வலம் நடைபெறவுள்ளதால் இந்த போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுகின்றது.
இன்று (23) இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை குறித்த வீதி பகுதி போக்குவரத்திற்காக மூடப்படும் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
