
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவுகள் நாளை (22) வங்கிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 முதியவர்களுக்கும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 72,525 முதியவர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன.
தகுதி பெற்ற பயனாளிகள் தங்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் நாளை முதல் இந்த தொகைகளைப் பெற முடியும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
