
அநுராதபுரம், வெவெல்கெட்டிய – பிஹினியாகொல்லேவ பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுடைய யானைக்குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பண்டுலகம வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவின் கால்நடை மருத்துவர்களான சந்தன ஜயசிங்க மற்றும் உதெஷிகா மதுவந்தி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர், யானைக்குட்டிக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
இதேவேளை, சிகிச்சை பெற்று வரும் யானைக்குட்டியின் உடல்நிலை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
