ஐ.பி.எல். 2026 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.
இந்த போட்டியை முன்னிட்டு, பெங்களூரு அணியின் முக்கிய வீரரான விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் சவால்களை சந்திக்கக்கூடும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு தொடரின் ஆரம்ப இரண்டு போட்டிகளில் கோலி 69* மற்றும் 28 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும், ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மாவுக்கு எதிரான அவரது கடந்தகால சாதனை சாதகமாக இல்லாதது குறிப்பிடத்தக்கது.
இதனால், இன்றைய போட்டியில் கோலிக்கு கடினமான நிலை உருவாகலாம் என அவர் மதிப்பீடு செய்துள்ளார்.
