கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய (06) வர்த்தக நடவடிக்கைகள் சிறிய முன்னேற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.

அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 9.18 புள்ளிகளால் உயர்வு கண்டுள்ளது. இதன் விளைவாக, மொத்த சுட்டெண் 0.04% அதிகரித்து 21,126.60 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
மேலும், இன்றைய மொத்த வர்த்தகப் புரள்வானது சுமார் 3 பில்லியன் ரூபாயாக இருந்தது.
கடந்த சில நாட்களாக சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கிடையில், இன்றைய இந்த நேர்மறை முன்னேற்றம் முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
