
ஈரானின் அனுமதியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 15 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணம் செய்துள்ளதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், மோதல் ஆரம்பிக்கும் முன் நிலவிய அளவுடன் ஒப்பிடுகையில், இந்த கடற்பாதை வழியான கப்பல் போக்குவரத்து தற்போது சுமார் 90 சதவீதம் குறைந்துள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட ஈரானிய அதிகாரிகள், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படவில்லை என்றும், அது எதிரி நாடுகளுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
