அமெரிக்காவில் வெளிநாட்டவர்களின் 3 இலட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் இரத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இதுவரை 3 இலட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தப் புள்ளிவிவரங்கள் நேற்று (20) வெளியிடப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2025 ஜனவரியில் ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமானது முதல், இரத்துச் செய்யப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 75 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அண்மைய வாரங்களில் விசாக்களை இரத்துச் செய்யும் நடவடிக்கைகள் மேலும் வேகமடைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்தை மீறுதல், மோசடிகளில் ஈடுபடுதல் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற காரணங்களுக்காக விசா பெற்றுத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு எதிராகத் தமது நிர்வாகம் எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிகாட் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகள் மனித உரிமை அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top