
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க 2002ஆம் ஆண்டு நிலைநாட்டிய சாதனையை, சீன வீராங்கனை சென் யுஜியே 24 ஆண்டுகளுக்குப் பின்னர் முறியடித்துள்ளார்.
சென் யுஜியே மகளிர் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை 11.06 விநாடிகளில் நிறைவு செய்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக, 2002ஆம் ஆண்டு பூசானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் சுசந்திகா ஜெயசிங்க 100 மீற்றர் ஓட்டத்தை 11.15 விநாடிகளில் நிறைவு செய்து சாதனை படைத்திருந்தார்.
சுமார் 24 ஆண்டுகளாக நீடித்த இந்தச் சாதனையை, சென் யுஜியே 11.06 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து முறியடித்துள்ளார்.
இதன் மூலம் மகளிர் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் புதிய வரலாற்றை அவர் பதிவு செய்துள்ளார்.
