மகன் ஆத்விக்கின் கால்பந்து வெற்றியை நிழற்படங்களுடன் கொண்டாடிய ஷாலினி

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினரின் மகன் ஆத்விக் அஜித், பாடசாலை மட்டத்திலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

மகனின் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகை ஷாலினி அஜித், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆத்விக்குடன் எடுத்துக்கொண்ட நிழற்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள நிழற்படங்களில், வென்ற கிண்ணம் மற்றும் பதக்கத்துடன் ஆத்விக், தனது தாயார் ஷாலினியுடன் மகிழ்ச்சியாகக் காட்சியளிக்கிறார்.

இந்த நிழற்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அஜித்தின் ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் ஆத்விக்கிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆத்விக்கின் விளையாட்டு ஆர்வம் தொடர்பான இந்தப் பதிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top