
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் தாக்கத்தால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாதங்களாக நீடித்த சரிவுக்குப் பின்னர் மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது.
இதன் காரணமாக, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.
சமீபத்திய சந்தை நிலவரத்தின்படி, ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 100.60 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அதேவேளை, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 92.13 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளின் தாக்கம் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் விலை ஏற்ற, இறக்கங்கள் தொடரக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
