
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இயங்கும் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கான 2026 கல்வியாண்டின் இரண்டாம் தவணை இன்று (24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இதனிடையே, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
அந்தப் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 3 ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
