‘Nudify’ செயலிகளுக்கு எதிராக அப்பிள், கூகுளுக்கு உத்தரவு

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர சட்டத்தரணி அலுவலகம், நிழற்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மாற்றி நபர்களை நிர்வாணமாகக் காட்டும் திறன் கொண்ட ‘Nudify’ செயலிகளை தங்களது செயலி அங்காடிகளில் இருந்து நீக்குமாறு அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

காலிஃபோர்னியா மாநில சட்டத்தின்படி, ஒருவரின் அனுமதியின்றி டீப்ஃபேக் (Deepfake) ஆபாசப் படங்களை உருவாக்குவது அல்லது அதனை ஊக்குவிப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. மேலும், 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம், இவ்வாறான செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் மூன்றாம் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ நகர சட்டத்தரணி டேவிட் சியூ, பெண்கள் மற்றும் சிறுமிகளை இலக்காகக் கொண்டு அனுமதியின்றி டீப்ஃபேக் படங்களை உருவாக்கும் செயலிகள் மூலம் அப்பிள் மற்றும் கூகுள் வருவாய் ஈட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டியதுடன், அவற்றை உடனடியாக செயலி அங்காடிகளில் இருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், Tech Transparency Project (TTP) வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் அப்பிள் மற்றும் கூகுள் செயலி அங்காடிகளில் பல ‘Nudify’ செயலிகள் இடம்பெற்றிருந்ததாகவும், அவற்றின் மூலம் அனுமதியின்றி உருவாக்கப்பட்ட தனிப்பட்ட படங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top