யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, பாதுகாப்பு அமைச்சர் மைக்ஹெய்லே ஃபெடோரோவை திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

இந்த நடவடிக்கை யுக்ரைன் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், ஸெலென்ஸ்கியின் பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட மிகச் சர்ச்சைக்குரிய முடிவுகளில் ஒன்றாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் கிய்வ் உள்ளிட்ட பல நகரங்களில் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “ஃபெடோரோவை தொடாதே!” மற்றும் “வெற்றியை சீர்குலைப்பதை நிறுத்து!” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பாதுகாப்பு அமைச்சர் ஃபெடோரோவுக்கும், யுக்ரைன் இராணுவத் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கிக்கும் இடையே நீடித்த அதிகாரப் போட்டியே இந்த பதவி நீக்கத்திற்கான முக்கிய காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, யுக்ரைன் பாதுகாப்புச் சேவையின் தற்காலிகத் தலைவரான மேஜர் ஜெனரல் யெவ்ஹேனி பிமாரா இடைக்கால பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ஸெலென்ஸ்கியால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நாட்டின் புதிய பிரதமராக செர்ஜி முராவியெவ் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
