இன்று மேலும் குறைந்த தங்க விலை; புதிய விலை விவரங்கள் வெளியீடு

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (09) மேலும் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (08) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 376,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ. 2,000 குறைந்து ரூ. 374,000 ஆக பதிவாகியுள்ளது.

தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 374,000 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 344,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை ரூ. 46,750 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை ரூ. 43,013 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களின் தாக்கத்தால், அண்மைய நாட்களாக உள்நாட்டு தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியான ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top