
நிலப்பரப்பு:
சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.
கடல் பிராந்தியங்கள்:
சிலாபத்திலிருந்து கொழும்பு வழியாக காலி வரையிலான கடல் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
கடல் பகுதிகளில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையும் கடல் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றர் அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் காற்று அடிக்கடி பலமாக வீசக்கூடும். இதனால் இக்கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழ்ந்துள்ள ஏனைய கடல் பகுதிகளிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் அவை ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
மேலும், சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் கடலலைகள் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
