
பொலன்னறுவை மாவட்டத்தின் அரலகன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்பொக்குன பகுதியில் குடும்பத் தகராறு வன்முறையாக மாறியதில், 29 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு (03) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கணவர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் பெண் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் அரலகன்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அரலகன்வில, பிம்பொக்குன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சந்தேகநபரான கணவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை அரலகன்வில பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
