இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை “என் தங்கை” என அன்புடன் குறிப்பிட்டு வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணத்தின் போது, சுமார் ₹35,000 கோடி முதலீட்டில் ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுந்து உற்பத்தி ஆலையை இரு தலைவர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.
இதனையடுத்து, புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா–ஜப்பான் 16ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டில் இரு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த உச்சிமாநாட்டில் பொருளாதாரப் பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, முக்கிய தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன.
மேலும், டெல்லியில் நடைபெற்ற இந்தியா–ஜப்பான் வர்த்தக மன்றக் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஜப்பானிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
அந்நிறுவனங்கள் இந்தியாவில் விநியோகச் சங்கிலிகள், முக்கிய கனிமங்கள், அரைக்கடத்தி (Semiconductor) தொடர்பான துறைகள் மற்றும் தூய்மையான எரிசக்தி உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் ₹1.19 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன.
