
ஈரான் ஒருபோதும் அணுவாயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்றும், அந்நாட்டின் அணுவாயுதத் திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதே தற்போதைய முக்கிய நோக்கம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான சாத்தியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
அமெரிக்கா–ஈரான் உறவுகள் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ஈரானின் அணுவாயுதக் கொள்கை தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஈரானின் அணுவாயுத திறன் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமின்றி தொடர்வதாகவும், அந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால பேச்சுவார்த்தைகளில் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
