
உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01) பவுணுக்கு 3,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (30) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 379,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 379,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 348,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,588 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், உள்நாட்டு சந்தையிலும் பிரதிபலித்து வருவதால், தங்கத்தின் விலையில் தினசரி மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.
