
ஐரோப்பா முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெப்ப அலையால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான ஆரம்பக்கட்ட தரவுகளை வெளியிட்டுள்ள அதிகாரிகள், மேலதிக தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருவதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவின் பல நாடுகளில் வெப்ப அலை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், மக்கள் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்கவும், போதிய அளவு நீர் அருந்தி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
