
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயர்வைப் பதிவு செய்துள்ளன.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,070.32 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அதேவேளை, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 58.94 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, எதிர்வரும் நாட்களில் உள்நாட்டு தங்க சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
