இலங்கையில் இன்று உயர்ந்த தங்க விலை

இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ரூ.5,000 அதிகரிக்கப்பட்டு ரூ.386,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலையும் ரூ.5,000 அதிகரித்து ரூ.355,200 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.48,250 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.44,400 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top