
தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது நீண்டகால சுகாதாரப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்யாத பிளாஸ்டிக் தயாரிப்புகளை நீண்டகாலமாக பயன்படுத்துவதால் பல்வேறு ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு சேமிப்பு மற்றும் கையாளுதலுக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தரம் குறித்து பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாதுகாப்பான உணவு கையாளல் நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்களை குறைப்பதற்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
