
ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம், நேற்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. புஜ்ஜி பாபு சனா இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் பணியாற்றியுள்ளார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, போமன் இரானி மற்றும் திவ்யேந்து உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளியீட்டின் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.135.36 கோடிக்கும் அதிகமான வசூலை ‘பெத்தி’ திரைப்படம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வார இறுதி நாட்கள் தொடரும் நிலையில், இப்படம் மேலும் உயர்ந்த வசூல் சாதனைகளைப் பதிவு செய்யும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
