
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,441.66 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் 35.60 அமெரிக்க டொலர்கள் அல்லது 0.80 சதவீதம் குறைவாகும்.
இதேவேளை, வெள்ளியின் விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது.
ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 72.67 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதுடன், இது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் 1.09 அமெரிக்க டொலர்கள் அல்லது 1.48 சதவீதம் குறைந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலக பொருளாதார நிலவரங்கள், நாணய மாற்று விகிதங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் சந்தை நகர்வுகள் ஆகியவை இந்த விலை மாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
