
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் உயர்வு பதிவாகியுள்ளது.
அதன்படி, WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 0.06 அமெரிக்க டொலர்கள் (0.06%) அதிகரித்து 93.10 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
மேலும், பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 0.35 அமெரிக்க டொலர்கள் (0.37%) உயர்ந்து 95.38 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலையும் 0.014 அமெரிக்க டொலர்கள் (0.42%) அதிகரித்து 3.350 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கை அமலுக்கு வந்துள்ளதுடன், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் குறைந்து பிராந்திய மோதல்கள் முடிவுக்கு வரக்கூடும் என்ற சந்தை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த விலை உயர்வுகள் பதிவாகியுள்ளன.
