
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பரபரப்பு நிலவியுள்ளது.
திடீரென ஏற்பட்ட தீ, அருகிலிருந்த வாகன நிறுத்துமிடத்துக்கும் பரவி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என்றும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தினால் ஏற்பட்ட அடர்ந்த கரும்புகை வானை மூடியதால், மேடவாக்கம் முதல் வேளச்சேரி வரை வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி பகுதிகளில் கரும்புகை காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
