
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக ஊடக தளமான Truth Social-இல் பதிவிட்டுள்ள அவர், இந்த பேச்சுவார்த்தைகள் எந்த முடிவை நோக்கிச் செல்லும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
“இந்த பேச்சுவார்த்தைகள் எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், நான் ஈரானிடம் கூறியது போல, எப்படியாவது ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான நேரம் இதுதான்” என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை செயல்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
