
நாட்டின் பல பகுதிகளில் நாளை (03) 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கன முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீரற்ற வானிலை நிலைமைகள் காரணமாக குறித்த பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதானத்துடன் செயல்படுமாறும், வானிலை தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
