ஐ.பி.எல். 2026 தொடரின் தகுதிகாண் சுற்றில், Rajasthan Royals அணிக்காக விளையாடிய இளம் நட்சத்திரம் Vaibhav Sooryavanshi மீண்டும் ஒருமுறை தனது அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

Sunrisers Hyderabad அணிக்கு எதிரான போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய 15 வயதான சூர்யவன்ஷி, வெறும் 29 பந்துகளில் 97 ஓட்டங்கள் குவித்தார். அவரது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகளும் 12 சிக்ஸர்களும் இடம்பெற்றிருந்தன.
அவரது இந்த மிரட்டலான ஆட்டத்தின் உதவியுடன், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய எண்ணிக்கையைப் பதிவு செய்தது.
மேலும், சூர்யவன்ஷி வெறும் 16 பந்துகளில் அரைச்சதம் கடந்ததன் மூலம், ஐ.பி.எல். பிளே-ஆஃப் வரலாற்றில் அதிவேக அரைச்சதம் அடித்த வீரர் என்ற Suresh Raina-வின் சாதனையை சமன் செய்தார்.
இந்த சாதனையை ரெய்னா, 2014ஆம் ஆண்டு Chennai Super Kings மற்றும் Punjab Kings அணிகள் மோதிய தகுதிகாண் போட்டியில் படைத்திருந்தார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், சூர்யவன்ஷி சதத்தை எட்டாமல் 97 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்த ஏமாற்றத்தை அவர் களத்திலேயே வெளிப்படுத்தியிருந்தார்.
போட்டி முடிந்த பின்னர், தனது சமூக வலைத்தளப் பதிவில் “Hungry for More” (இன்னும் பசி அடங்கவில்லை) என சூர்யவன்ஷி குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு இந்திய அணியின் அனுபவம் மிக்க சுழற்பந்து வீச்சாளர் Ravichandran Ashwin,
“டேய் டேய் டேய்… டூ மச் டா தம்பி! வியக்கத்தக்க ஆட்டம்” என நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளார்.
இந்த பதிவும், அஷ்வினின் கருத்தும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
